பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக 14ம் தேதி சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஜிஜிங்பிங், சீன பிரதமர் லீ கெகியாங் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து முக்கிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 24 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எல்லைப் பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வுகாணவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
சீன சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி 26 வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்தியா மற்றும் சீன வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இன்று 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து, 600 கோடி) இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து தனது சீன சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக மங்கோலியா புறப்பட்டுசென்றார். அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.