ஜூன் 21ந் தேதி டெல்லி ராஜ பாதையில், 16 ஆயிரம் குழந்தைகளுடன் பிரதமர் மோடி யோகாசனம்

 சர்வதேச யோகா தினத்தை யொட்டி, வருகிற ஜூன் 21ந் தேதி டெல்லி ராஜ பாதையில், குழந்தைகளுடன் பிரதமர் மோடி யோகாசனம் செய்கிறார்.

.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன் பற்றி குறிப்பிட்டு, சர்வதேசளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை டிசம்பர் மாதம் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி, முதல் சர்வதேச யோகா தினம் வருகிற ஜூன் 21ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தைமுன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் அன்று காலை 7 மணி முதல் 7.30 மணிவரை பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பள்ளிக்கூட குழந்தைகள் உள்பட 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கலந்துகொண்டு யோகாசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. பிரதமர் மோடியும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்ய இருக்கிறார்.

அந்தசமயத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யோகாசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏராளமான பேர் கலந்துகொள்ளும் மிகப்பெரிய யோகாசன நிகழ்ச்சி என்பதால், இதுபற்றி உலக சாதனைகளை தொகுத்துவழங்கும் கின்னஸ் புத்தக நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினத்தை உலகளவில் சிறப்பாக கொண்டாடும் வகையில், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு யோகா குருக்களை அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...