பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச சுற்றுப் பயணத்தின் போது, அவருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்கிறார் .
இந்தப் பயணத்தின் போது டீஸ்தா நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்கபடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. டீஸ்தா நதிநீர் பங்கீடுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் மம்தாவின் எதிர்ப்புகாரணமாக அது இறுதிநேரத்தில் கைவிடப்பட்டது.
டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வங்கதேசத்தில் நீர் பற்றாக் குறை ஏற்படும். இதனை எதிர் கொள்வதற்கு டீஸ்தா நதிநீர் வங்கதேசத்துக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நதிநீர் பங்கீடுகுறித்த மேற்கண்ட ஒப்பந்தம் மோடி பயணத்தின் போது நிறைவேறும் என்று நம்புவதாக வங்க தேசம் கூறியுள்ளது. அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 'இந்த விஷயத்தில் மேற்கு வங்க அரசிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.