நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங்

 வரும் 15ம் தேதி நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கினார். அப்போது கூறுகையில், ''பிஎஸ்என்எல் நிறுவன மொபைல் இணைப்பு வைத்திருப் பவர்களுக்கு நாடுமுழுவதும் வரும் 15ம் தேதி முதல் இலவசரோமிங் சலுகை அளிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் விரும்பிய எந்த நிறுவனத்துக்கும் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்வதற்கான தேசிய எம்என்பி (மொபைல் நம்பர் போர்டபிளிடி) அடுத்த மாதத்தில் அமலாகிறது.

கடந்த நிதியாண்டில் பிஎஸ்என்எல் வருவாய் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. நான் பொறுப்பேற்கும் போது பிஎஸ்என்எல் ₹7,500 கோடி இழப்பை சந்தித்திருந்தது. இதுபோல் எம்.டி.என்.எல்.,லும் இழப்பில் தான் இருந்தது. இவற்றை லாபகரமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் முக்கிய சுற்றுலாதலங்களில் பிஎஸ்என்எல் மூலம் இலவச வை-பை வசதி அளிக்கப்பட உள்ளது'' என்றார்.

பிஎஸ்என்எல் முதன்மை நிர்வாக இயக்குனர் அனுபம் வத்சவா கூறுகையில், '' இலவச ரோமிங் கால் வருவாய் குறையும் எனினும், பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதை தடுத்து, புதிய வாடிக்கை யாளர்களை ஈர்க்க உதவும்'' .

இந்த இலவசரோமிங் ஓராண்டுக்கு இருக்கும். மார்ச் இறுதி நிலவரப்படி 7.72 கோடி பிஎஸ்என்எல் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளனர். தற்போது மாநில அளவில் ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டும் ஒருநிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவன சேவைக்கு மொபைல் சந்தாதாரர்கள் மாறிக்கொள்ளும் வசதி உள்ளது. நாடுமுழுவதுமான எம்.என்.பி வசதி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், நாட்டின் எந்தபகுதிக்கு சென்றாலும், மொபைல் எண்ணை மாற்றாமலேயே அங்குள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...