தமிழக பாஜக.,வின் 2–வது நாள் செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் உள்ள பாரடைல்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாஙகினார்.
மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் எச். ராஜா, மோகன் ராஜூலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
டாஸ்மாக் கடைகளால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும். இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மாநில அளவில் பல கட்ட போராட்டம் நடத்தும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது. ஓர் ஆண்டு காலம் மத்தியில் நல்லாட்சி நடத்திய மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.
உலக அளவில் பாரதீய ஜனதா கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்த அமித்ஷாவிற்கு நன்றி தெரிவிப்பது.
ராஜராஜசோழன் தபால் தலை வெளியிட்ட மத்திய அரசுக்கு பாராட்டுதெரிவிப்பது. அரசு ஊழியர் காலி பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்பவேண்டும்.
கல்வியை வியாபாரம் ஆக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நவடிக்கை எடுக்கவேண்டும். 25 சதவீதம் ஏழை மாணவர்கள் படிக்கிறார்களா? என கல்வி நிறுவனங்களில் ஆய்வுநடத்த வேண்டும்.
மகாமக திருவிழாவை மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக பேசி தேசிய விழாவாக அறிவிக்க செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
மேகதாது, முல்லைப் பெரியாறில் புதிதாக அணைகட்ட அனுமதி வழங்ககூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கிகூறினார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.