தே.ஜ., கூட்டணி அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, அடுத்தமாதம், 1ம் தேதியில், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ள இந்ததிட்டத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடபட்டுள்ளது.
* நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும், 'பிராட் பேண்ட்' இணையவசதியை ஏற்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
* முதல்கட்டமாக, 2016க்குள், 2.5 லட்சம் கிராமங்களில் இந்தவசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
* அரசின் அனைத்து சேவைகளையும் இணையம் மூலமாகவே மக்களுக்கு அளிப்பது இந்ததிட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம்.
* நாடுமுழுவதும் உள்ள, 2.5 லட்சம் பள்ளிகளில், 'வை – பை' எனப்படும், கம்பியில்லா இணையதொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 கோடி மக்களை, இணையம் மூலமாக இணைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
* முக்கியமான சுற்றுலா தலங்கள் மற்றும் நான்கு லட்சம் பொதுஇடங்களில், இணைய மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
* பிராட்பேண்ட் வசதியை பயன் படுத்த, வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, மாதத்துக்கு, 150 ரூபாயும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் வசிப்போருக்கு, 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், வசதி படைத்தவர்களைவிட, ஏழைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நம் நாட்டில் தற்போது தகவல் தொழில்நுட்ப துறையால், 30 லட்சம்பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டால், ஐந்து கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.