இந்த டிஜிட்டல் திட்டத்தால் என்ன பயன்கள்?
-
குக்கிராமங்களுக்கு பிராட்பேண்ட இணைய இணைப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும்.
-
இத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
-
அனைத்து அரசு துறைகளும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்படும்.
-
அரசின் சேவைகள் முழுவதும் இணையதளம் வாயிலாக வழங்கப்படும் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடநூல்களை டிஜிட்டல் முறையில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்படி டவுன்லோடு செய்யும் புத்தகங்களை ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட், மடிக்கணிணி ஆகியவற்றில் 'சேவ்' செய்து கொள்ளவும் முடியும்.
-
பாடங்களுக்கான ஆடியோ ஃபைல்கள், பிராக்டிகல் தேர்வுகளுக்கான வீடியோக்களையும் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்
-
டிஜி லாக்கர் எனப்படும் ஆவண சேமிப்பு சேவையின் மூலம் தனிநபர்கள் தங்களது பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ், ஓட்டுனர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை டிஜி லாக்கர் வெப்சைட்டில் இலவசமாக சேமித்து வைக்கலாம்.
-
டிஜி லாக்கர் சேவையை பயன் படுத்த ஆதார் எண் மற்றும் செல்போன் எண் அவசியம். இதேபோல் இ எஜூகேசன், இ ஹெல்த், இ சைன் என பல சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.
-
செல்போன்கள் மூலம் அனைத்து அரசுத்துறைகளையும் எளிதில் அணுக வழிவகை செய்யப்படும் இதற்காக " digital India Portal, MyGov Mobile App, Swachh Bharat Mission App, Aadhaar Mobile Update App" ஆகிய ஆப்கள் வெளியிடப்படும்.
-
இத் திட்டத்தின் கீழ் பல கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
-
4 லட்சம் இணைய இணைப்பு மையங்கள் உருவாக்கப்படும். 2.5 லட்சம் கல்வி நிறுவனங்களுக்கு வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.