தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மெட்ரோ ரெயிலில் பயணம்செய்தார். நேற்று காலை 10.30 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் கோயம்பேடு ரெயில் நிலையத்துக்கு வந்தவர் பயணிகளுடன் வரிசையில் நின்று ஆலந்தூர் செல்ல டிக்கெட் வாங்கினார்.
பின்னர் ஆலந்தூருக்கு ரெயிலில்சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– மெட்ரோ ரெயிலில் ஏறியதும் இந்நாடு எவ்வளவு முன்னேறி வருகிறது என்ற உணர்வோடு பயணம் செய்தேன். பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோரெயில் சேவை வந்துவிட்டது.
தமிழகத்தில் தாமதமாக வந்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த மெட்ரோ ரெயில் பணிகளை சூப்பர் பாஸ்ட் ஆக விரைவுபடுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. மாநில அரசின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது.
மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.40 என்பது அதிகம்தான். கட்டண நிர்ணய குழுவினர் சில செலவுகளையும், இழப்பீடுகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டால் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே கட்டண குறைப்புக்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.
அதிக அளவில் பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த வேண்டும்.
மெட்ரோ ரெயிலை கொண்டு வந்தது யார் என்று உரிமை கோரி சண்டை போடுவதைவிட இதில் பயனடையப் போவது மக்கள் என்ற உணர்வு வேண்டும்.
மெட்ரோ ரெயில் சேவையை திருவொற்றியூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். நெற்குன்றம், அரும்பாக்கம் பகுதிகளை சேர்ந்தவர்கள் ரெயில் நிலையத்துக்கு வருவதற்கு வழித்தடங்கள் சரியில்லை என்றார்கள். அதை உடனே செய்து கொடுக்க வேண்டும்.
மெட்ரோ ரெயில் பணி விரைவாக நடந்திருந்தால் ரூ.6 ஆயிரம் கோடி மிச்சப்பட்டிருக்கும். பிரதமர் மோடியை பொறுத்தவரை மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து தேவையான திட்டங்களை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் முடிப்பது தான் அவரது வழக்கம்.
தமிழக சட்டமன்றத்துக்குள் நடப்பது என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காக நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் நேரடி ஒளிபரப்புக்கு தேவையான நிதி இல்லை என்று தமிழக அரசு கூறியிருப்பது ஏற்படையதல்ல. இதைவிட கூடுதல் நிதி காணொலி காட்சிக்கு செலவிடப்படுகின்றன.
மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி அரசு தொலைக்காட்சியிலாவது நேரடி ஒளிரப்புக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அப்படியானால் தான் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றுள்ளார். 2015–ம் ஆண்டில் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது மக்களுக்கு அரசாங்கம் சிறப்பாக நடக்க வேண்டும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பஸ் நிலையங்களில் தனி அறை அமைக்கப்படுவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இவ்வளவு டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது இந்த திட்டங்களால் என்ன பயன்?
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம். மெட்ரோ ரெயிலை பற்றி 2 திராவிட கட்சிகளும் சண்டை போட்டுக்கொள்கின்றன. இதில் 2 கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளில் மெட்ரோ ரெயில் இருந்தும் அதை இங்கு கொண்டு வர தாமதம் ஏன் ஏன்று சிந்தித்தார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.