இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் இஸ்லாமிய பாரம்பரியம்தான், இந்நாடுகளில் பயங்கரவாதத்தை நிராகரித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்றார். அங்கு பலமுக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உஸ்பெகிஸ்தானில் இருந்து நேற்று, அதன் அண்டைநாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் சென்றார் மோடி. அதன் தலைநகர் அஸ்தானாவில், மோடிக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்குள்ள, நசர் பெயேவ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் , இந்தியாவிலும், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நிலவும் மத சகிப்புத்தன்மை, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு பாராட்டுக்குரியது. . மத்திய ஆசிய நாடுகளுடன் ராணுவம், பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா ஒத்துழைக்க விரும்புகிறது..
கஜகஸ்தான் நாட்டில், இந்தி மொழிக்கும், பாலிவுட் படங்களுக்கும் நல்லவரவேற்பு உள்ளது. இங்குள்ள ரேடியோவின் இந்தி ஒளிபரப்பு, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பாலிவுட்படங்கள் பல, இந்தியாவில் ரிலீசாகும் நாட்களிலேயே, இங்கேயும் வெளியாகின்றன.இந்நாட்டு, 'டிவி'களில், ராமாயணம், மகாபாரத தொடர்கள் மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளன.என்று பிரதமர் மோடி பேசினார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.