தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகுபாடு பார்க்கக்கூடாது

 உலகத்துக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ள தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகுபாடு பார்க்கக்கூடாது. பிரிக்ஸ் நாடுகள், உலகின் 44 சதவீத மக்கள்தொகையை கொண்டுள்ளன. உலகளாவிய மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. உலகவர்த்தகத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 18 சதவீதம் பங்களிப்பு இருக்கிறது.

விவசாயம், உற்பத்தி, தொழில்நுட்பம், சேவைகள், மனிதவளங்கள், நிலைத்து நிற்கும் வளர்ச்சி என பல துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒரேமாதிரி இருக்கின்றன.

இந்த பிரிக்ஸ் நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, முன்னேற்றத்தின் தூண்டு கோலாக அமையும்.

உலக பொருளாதாரம் இப்போது வலுவாக இல்லை. ஐரோப்பிய நாடுகள் போன்ற பொருளா தாரத்தில் வளர்ந்த முக்கிய நாடுகள் கூட தற்போது நெருக்கடியில் உள்ளன. நிதிசந்தைகள் ஸ்திரமாக இல்லை.

ஒரு தலைப்பட்சமான பொருளாதார தடைகள், உலக பொருளாதாரத்தை பாதிக்கிறது. (உக்ரைன் விவகாரத்தில், ரஷிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷியா செயல்படுவதாக குற்றம்சாட்டி, அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் விதித்திருப்பதை அவர் மறைமுகமாக சாடினார்.)

எனவே பிரிக்ஸ் பொருளாதார நாடுகள், தங்களுக்கு இடையே ஒத்துழைபினை வலுப்படுத்த வேண்டியது அவசியம் . பிற வளர்ந்த பிராந்தியங்களுடன் பிரிக்ஸ் இணைந்து பணியாற்றவேண்டும்.

பிரிக்ஸ் நாடுகள் இடையே உற்பத்திதுறை வளர்ச்சி அடைய வேண்டும். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும். உறுப்பு நாடுகள் அனைத்தும் இதன் மூலம் பலன் அடையமுடியும்.

பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி, பிரிக்ஸ் நாடுகள் இடையே எல்லை கடந்த கூட்டு திட்டங்களுக்கு நிதிவழங்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் இடையே 'தற்செயல் கையிருப்பு ஏற்பாடு' விரைவில் அமலுக்குவரும். இது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர உதவும். நிதி ஏற்பாடுகள் மூலம் உறுப்பு நாடுகள் பலன் அடையமுடியும்.

நாம் பிரிக்ஸ் விளையாட்டு கவுன்சிலை தொடங்கவேண்டும். அதன் முதல் நிகழ்வாக, இந்தியா கால்பந்து போட்டியை நடத்த தயாராக உள்ளது.

உலகத்துக்கு மிகப் பெரிய சவாலாக தீவிரவாதம் அமைந்துள்ளது. அதை எதிர்த்துபோரிட்டு ஒடுக்குவதில், பாகுபாடு பார்க்கக்கூடாது.

ஐ.நா.விலும், ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் உடனடியாக சீர்திருத்தம் செய்யவேண்டும். பருவநிலை மாற்றம், வறுமை போன்ற சவால்களை எதிர்த்து போரிடுவதற்கு இது மிகவும் கண்டிப்பானதேவை ஆகும். 70 ஆண்டுகளை நிறைவுசெய்கிற நிலையில், ஐ.நா.வில் சீர்திருத்தம் செய்யாமல், 21-ம் நூற்றாண்டின் சவால்களை சந்தித்துவிட முடியாது. அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களையும், விதி முறைகளையும் பின்பற்றவேண்டும்.

ரஷியாவில் உள்ள உபா நகரில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் 7-வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...