தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெறும் சட்ட பேரவைத் தேர்தலில் சமூக ஊடகங்களை பிரசார ஆயுதங்களாக பயன் படுத்துவோம் . வரும் 2016-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் சமூக ஊடகங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் 500 பேர்வரை கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது. அரசை மாற்றும் சக்தி சமூக ஊடகங்களுக்கு இருப்பதால், இளைஞர்களின் மூலம் சமூக வலை தளங்கள் உள்ளிட்டவைகளில் பிரசாரம் செய்ய உள்ளோம்.
இதேபோன்று அனைத்து வாய்ப்புகளையும் பயன் படுத்தி சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வோம்.
தமிழகத்தை பொருத்த வரையில் பாஜகவில் 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது, மிகப்பெரிய அளவில் பாஜக வளர்ந்து வருவதை காட்டுவதாக உள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு வியூகங்களை கையாள உள்ளோம். அதில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்திப்பதும், அதிமுக அரசுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களின் செயல்படாக அமையும்.
இந்த வகையில் ஊழல், குறைந்து வரும் வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் மூடப்படும் சூழல் போன்ற அரசின் தவறான செயல்களை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.
சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்க தேவையில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போதும் செயல் பாட்டில் உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் பலகட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றார் .
பாஜக தொண்டர்களுக்கான சமூக ஊடகப் பயிலரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பேசியது.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.