இது முன்னரே திட்டமிட்டதாக்குதல்

 காரைக்குடியில் பா.ஜ., தேசியசெயலாளர் எச்.ராஜா வீட்டின் மீது நேற்று இரவு, பெட்ரோல் குண்டுடை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

காரைக்குடி சுப்பிரமணிய புரம் 10-வது வீதியில் எச்.ராஜா வீடு உள்ளது. அவர் சென்னையில் இருப்பதால், அவரது தம்பி பாஸ்கர் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். ராஜா, காரைக்குடி வந்தால் கட்சி பணிகளை இந்த வீட்டில் இருந்து கவனிப்பார்.

இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று இரவு 10.30 மணிக்கு, வைரவபுரம் பகுதியில் இருந்து வந்த இருவர் பெட்ரோல்குண்டை வீசி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். சப்தம்கேட்டு வந்த போலீசார் தீயை அணைத்தனர்.

இது குறித்து டி.எஸ்.பி., முத்தமிழ் விசாரிக்கிறார்.எச்.ராஜாவின் தம்பி மனைவி ஜானகி கூறுகையில், ''இரண்டு நாட்களாக இப்பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை. வீட்டுக்கு வெளியில் உள்ள மின் விளக்கை அணைத்து விட்டு அப்போதுதான் உள்ளே சென்றேன். திடீரென வெடிக்கும் சப்தம்கேட்டது. போலீசார் தீயை அணைத்து கொண்டிருந்தனர்,'' என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்கு முன், கண்டனுாரில் உள்ள எச்.ராஜாவின் தோட்டத்திற்கு அரிவாளுடன் சென்ற நபர்கள், காவலாளியை மிரட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக எச்.ராஜா கூறியதாவது; காலைதான் சென்னைக்கு வந்துள்ளேன். நான் அங்கிருப்பதாக அனுமானம் செய்துகொண்டு குண்டு வீசியிருக்கலாம். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளேன். இது முன்னரே திட்டமிட்டதாக்குதல் சம்பவம் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...