ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறியதையடுத்து அங்குள்ள நிலைமை குறித்து மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பார்ரிக்காருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலும் கலந்துகொண்டார். எல்லையில் கடந்த இரு தினங்களாக நிலவும் பதட்டமான சூழல் குறித்து முழுமையான ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் இந்தசந்திப்புக்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இன்று காலை எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் டிகே பதாக் அஜித்தோவலை சந்தித்து எல்லைப் பகுதியின் சூழல் குறித்து எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காஷ்மீர் செல்லவுள்ள நிலையில் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.