மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
நாடார் மஹாஜன சங்கம் சார்பில், காமராஜரின் 113ஆவது பிறந்தநாள் விழா கல்வித்திருவிழாவாக, விருதுநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கய்யநாயுடு மேலும் பேசியது:
மக்களுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்பவர்கள் இறந்தாலும், மக்கள் மனதில் என்றென்றும் நினைவில் நிற்கின்றனர். அதற்கு உதாரணமாக காமராஜரை குறிப்பிடலாம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் காமராஜர் திறம்படசெயலாற்றினார். ஆனால், இன்று அக்கட்சி மீளமுடியாத அளவுக்கு மக்களிடம் நம்பிக்கையை இழந்துவருகிறது.
நெருக்கடி நிலையை விரும்பாத காமராஜர், அன்றைய சூழலில் பலதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து வருந்தினார். அவர் ஒருகட்சிக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. தேசத்தின் சொத்து.
காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை பாஜக போற்றுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக, அவர் எத்தகையவழியில் செயலாற்றினாரோ, அதே வழியில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். காமராஜர் ஆட்சிக்கும், நரேந்திர மோடியின் ஆட்சிக்கும் பலஒற்றுமைகள் உள்ளன.
இன்றைய சூழலில் பெரும்பாலான கட்சித்தலைவர்கள் முதலில் தனது நலம், பின்னர் கட்சிநலம், அதன் பிறகே நாட்டின் நலத்தை பற்றிக் கவலைப்படுகின்றனர்.
நாட்டின் நலனுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் என்பது தேர்தல்வரை மட்டும்தான் என பாஜக நம்புகிறது. அதற்கு பிறகு கட்சிபாகுபாடின்றி நாட்டின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை அரசு, அரசியலாக பார்க்கவில்லை. மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அக்கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டு ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே இலக்கு. மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.