துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்புநிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அவரதுபேச்சை கேட்க ஏராளமான இந்தியர்கள் ஆர்வம் காட்டியதால் மைதானத்தில் நுழைவதற்காக முன்பதிவு செய்யபட்டது. சுமார் 40 ஆயிரம் பேர்வரை அமர வசதியுள்ள துபாய் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல்வசதி செய்யப்பட்டு மொத்தம் 50 ஆயிரம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தவிர மைதானத்துக்கு வெளியே இருந்து மோடியின்பேச்சை கேட்க 15 ஆயிரம்பேர் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டது. நேற்று மாலை மோடி பேசியபோது 50 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அங்கு உற்சாகமாக குவிந்தனர். இவர்கள் தவிர ஏராளமான உள்ளூர்மக்களும் வந்திருந்தனர். இரவு 8 மணிக்குதான் மோடி பேசினார். ஆனால் மாலை 3 மணி முதலே இந்தியர்கள் அங்கு வரத்தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மைதானத்துக்குள் நுழைந்தனர்.
மோடி இந்தியில் பேசினார். அது உள்ளூர் ரேடியோக்களில் நேரடியாக ஒலிபரப்பானது. ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மோடியின் பேச்சு உடனுக்குடன் மொழி பெயர்க்கபட்டு ரேடியோக்களில் ஒலித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் தமிழர்களும், மலையாளிகளும் அதிகம் உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு தலைவர் ஒரு வரது பேச்சை கேட்க இந்த அளவுக்கு மக்கள் குவிவதும், அவரதுபேச்சு ரேடியோவில் முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்பாவதும் இதுவே முதல் முறை.
மோடியின் வருகையை முன்னிட்டு துபாய் கிரிக்கெட் மைதானபகுதியே விழாக்கோலம் பூண்டது. ஏராளமான மக்கள் வந்து குவிந்ததால் தற்காலிகமாக உணவு கடைகளும் திறக்கப்பட்டன. மக்கள்வந்து செல்வதற்காக அரசு சார்பில் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோடி நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.