கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், 300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது . ஸ்மார்ட் சிட்டியை போன்று கிராமங்களில் அனைத்து வசதிகளும் இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. சியாமபிரசாத் முகர்ஜி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களை மேம்படுத்த கடந்த பட்ஜெட்டில் ரூ.5,142 கோடியை மத்திய அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தை செயல் படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்தது. நாடுமுழுவதும் 300 கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இப்பணிகளை 2020ம் ஆண்டுக்குள் முடிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கிராம பஞ்சாயத் துக்கள் மூலம் கிராமங்கள் கண்டறியபட்டு, அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. 25 ஆயிரம்முதல் 50 ஆயிரம்வரை மக்கள் தொகை அடங்கிய கிராமங்களை உள்ளிடக்கி இந்தபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலைப் பாங்கான இடங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களில் சாலை வசதிகள், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, வீடுகளுக்கு குடிநீர், காஸ் இணைப்பு, நடமாடும் மருத்துவ வசதி, டிஜிட்டல் முறையிலான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
நகர்புற வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை போன்று கிராமப்புறங்கள் மேம்பாட்டுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம மக்கள் பொருளாதாரத்தில் மேம்படும் வகையில், தொழிற் நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.