நமது ராணுவ வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் நாடு என்றென்றும் கடமைபட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார்.
இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில், "கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் துணிவுடனும், மன உறுதியுடனும் செயல்பட்ட நமது ராணுவ வீரர்களுக்கு நாடு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தில்லி "இந்தியாகேட்' பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடமான "அமர் ஜவான் ஜோதி'க்கு சென்ற பிரதமர் , அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் ராணுவ வீரர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியையும் மோடி பதிவுசெய்தார். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களில் சிலரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மோடி சந்தித்து பேசினார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.