இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டும்

 நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டும் . நான் இதற்கு முன்பும் கூறி உள்ளேன். வறுமையை எதிர்த்துபோரிட வேண்டுமா, முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா என்பதை இந்துக்கள் முடிவுசெய்ய வேண்டும்.

இந்துக்களை எதிர்த்து போரிட வேண்டுமா, வறுமையை எதிர்த்துபோரிட வேண்டுமா என்பதை முஸ்லிம்கள் தீர்மானிக்க வேண்டும். இருதரப்பினரும் இணைந்து நின்று, வறுமையை எதிர்த்து போரிட வேண்டும்.

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து, வறுமைக்கு எதிராக போரிட்டால்தான், இந்த நாடு பலன் பெற முடியும். ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், சமாதானம் ஆகியவைதான் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.

சில அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக பொறுப்பற்ற விதத்தில் பேசிவருகிறார்கள். அத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களை, யார் பேசினாலும், ஏன், நரேந்திர மோடியே பேசினாலும்கூட, நீங்கள் அவற்றுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை. அவற்றை காதுகொடுத்து கேட்காமல் புறக்கணித்து விடவேண்டும்.

நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றால் அது நமது ஜனாதிபதி காட்டிய வழிகாட்டுதல்களைத் தான்.
புதன்கிழமை (நேற்று முன்தினம்) ஜனாதிபதி நமக்கு பாதையை காட்டி இருக்கிறார். 125 கோடி மக்களின் தலைவர் சொல்லி இருக்கிறார் என்றால் அதைவிட பெரியதாக ஒன்றை கூறிவிட முடியாது; வழிகாட்டி விட முடியாது; பெரிய உத்வேகத்தை தந்துவிட முடியாது.

ஜனாதிபதி காட்டிய பாதையை பின்பற்றுவோம். அப்போதுதான் உலகம் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிற வற்றை இந்தியா சந்திக்க முடியும். அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவழியில் செயல்படுவது முடிவுக்கு வர வேண்டும்.

"குஜராத் மாநிலத்தில் யாதவ சமூகத்தினர் செய்த வெண்மை புரட்சியின் காரணமாகவே அங்கு 'அமுல்' என்ற ஒரு மிகப் பெரிய நிறுவனம் உருவாவது சாத்தியமானது.

ஆனால், இங்கு பிஹாரில் லாலுபிரசாத் என்ன சாப்பிடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. இந்துக்களும் மாட்டிறைச்சி புசிக்கின்றனர் என கருத்துகூறி, தன்னை அரசு அரியணையில் அமரவைத்த யாதவ சமூகத்தினரை இழிவு படுத்தியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி விட்டு இப்போது அதை திரும்பப்பெறுவதாக கூறுகிறார். "நான் பசுக்களை வளர்க்கிறேன். அவற்றை வணங்குகிறேன். சாத்தான் உந்து சக்தியால் தவறுதலாக என் நாக்கு அக்கருத்தை பதிவு செய்தது" என்கிறார்.

இப்படியெல்லாம் பேசி லாலு தனதுகருத்தை மறைத்து விட முடியாது. சாத்தானுக்கு லாலு பிரசாத்தின் முகவரி எப்படி கிடைத்தது என தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். இது வரை அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதுதான் முதன்முறையாக எங்களை ஒரு சாத்தான் துரத்திக் கொண்டிருக்கிறது" என்றார் மோடி.

பீகாரில், நவாதா என்ற இடத்தில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தாத்ரி சம்பவம் பற்றி நேரடியாக கூறாமல், 'அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு முன்னேறும்' என சுட்டிக் காட்டினார்.

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசும்போது இந்த சம்பவத்தைப்பற்றி நேரடியாக குறிப்பிடாமல், நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அப்போது அவர், ''நமது கலாசாரத்தின் அடிப்படை கோட்பாடுகள்தான் நம்மை பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக இருக்க வைத்துள்ளன. பல்வேறு பண்டைய நாகரிகங்கள் அழிந்து போனாலும், நமது நாகரிகம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு நமது கலாசாரத்தின் அடிப்படை கோட்பாடுகள்தான் காரணம். நமது பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவை வீணாய்ப்போவதை நாம் அனுமதிக்க முடியாது. இதை நாம் உணர்ந்து செயல்பட்டால் நமது ஜனநாயகம் முன்னோக்கி பீடுநடை போடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...