மத்தியபட்ஜெட் 2018-2019 அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒருபட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பானதொரு பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாராட்டுக்கள் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த பட்ஜெட்,
விவசாயி, பொதுவான குடிமக்கள்- வணிகம் மற்றும் -சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றுக்கு நட்புறவான பட்ஜெட், இந்தநாட்டில் வியாபாரம் செய்வது எளிதானது' என்ற இலக்கில் மட்டுமல்லாமல் மக்களின் எளிதான வாழ்க்கையிலும் அரசு கவனம்செலுத்துவதாக அவர் கூறினார்.
இப்போது 10 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய தேசியசுகாதார பாதுகாப்பு திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ரூ. 5 லட்சம்வரை கிடைக்கும் இது உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டங்களில் ஒன்றாகும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்வழி செய்யும். விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்துசேரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.