தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் .இலங்கை சிறையில் சிக்கத்தவிக்கும் மீனவர்களும், அவர்களது படகுகளும் விடுவிக்கபட வேண்டும். மீனவர்கள்மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு நிரந்தரதீர்வு காணப்பட வேண்டும்.
இது குறித்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 31-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாகத்தேவை.
உச்ச நீதிமன்ற உத்தவவின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைக் கண்டிப்பாகத் தரவேண்டும். நமது உரிமையை கேட்டுப் பெறுவதில் மத்திய அரசு ஒரு போதும் பின் வாங்காது.
தமிழகத்தில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில்சென்று கலப்பதைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாக தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலத்தடி நீர் ஆதாரத்தை சுரண்டும் விதமாக மேற்கொள்ளப்படும் மணல்கொள்ளையை முற்றிலும் தடுக்கவேண்டும்.
குளைச்சல் துறைமுகம் கட்டுவதற்கான ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்து அறிக்கை சமர்பிக்கபட்ட உடன் அது மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கபட்டு, துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
தேசிய நீர் வழிச்சாலை திட்டத்தின் கீழ், காவிரி உள்ளிட்ட 101 நீர்வழி போக்கு வரத்திற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 123 கோடி ரூபாய் மதிப்பிலான பக்கிங்காம் கால்வாய் நீர்வழி போக்கு வரத்து திட்டம், ஆந்திர மாநிலம், காக்கிநாடா முதல் பாண்டிச்சேரி வரையிலான 600 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்படும். இந்த தேசிய நீர் வழிச்சாலை திட்டத்துக்கு ஆந்திர அரசு முழுஒத்துழைப்பு கொடுத்ததால், இந்த திட்டம் சிறப்பாக முடிந்துள்ளது.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.