மரியாதைக்குரிய நம் பாரதப் பிரதமர் இந்த நாட்டில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அது போல் மாநிலத்தில் மாற்று கட்சி ஆட்சி செய்தாலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் எனவும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை நல்லதையும் மறைத்துவிட்டு ஏதோ இன்று எந்த மாநிலத்தில் எது நடந்தாலும் அதற்கு காரணம் மோடி என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுவதோடு இன்று மிகவும் வேதனை அளிப்பது தலித் சகோதர, சகோதரிகளுக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுவதோடு பல இடங்களில் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரசியலுக்காக மட்டும் அம்மக்களிடம் அக்கறை கொண்டுள்ளது போல் நடந்து கொள்ளும் கட்சிகள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத கட்சிகள் இன்று மோடி அரசைக் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராக பல அநீதிகள் இழைக்கப்பட்ட போது கூட எதிர்த்துக்குரல் கொடுக்காத சில எதிர்க்கட்சிகள் இன்று எதற்;கெடுத்தாலும் மோடி அரசை குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல இன்று நாடுமுழுவதும் இது வரை அழுத்தி வைக்கப்பட்ட இந்த சகோதரர்களுக்கு நல்லதை இந்த அரசு செய்து வரும்போது அந்த மக்களில் தாழ்நிலை வாழ்க்கையை வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகள் இன்று மோடி அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது.
மத்தியில் பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியில் மட்டும் 4 பேர் அமைச்சர்களாகவும், பீகாரில் கவர்னராகவும் நம் தலித் இனத்தவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது இந்த அரசு.
பாஜக-வில் இருந்து மட்டும் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே வலியுறுத்தி ஆக வேண்டும். பல இடங்களில் Reservation அல்லாத தொகுதிகளிலும் இவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள் என்பதை பாரதிய ஜனதா பெருமையோடு நினைவு கொள்கிறது.
நேற்று வானொலியில் பேசிய நம் பிரதமர் தலித் மாணவர்களின் கல்வி ஊக்குவிக்கப்படும் என்றும் அவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க அரசு வழிவகை செய்யும் என்றும் பேசியிருக்கிறார் அதுமட்டுமல்ல தன் மக்கள் எல்லா உரிமையும் பெற்று வாழ வேண்டும் என்று பாடுபட்ட நம் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் பெயரால் நடைபெறும்.
Foundation மூலம் அவர்களின் கலப்புத் திருமணங்களுக்கு 2½ லட்சம் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும்போது குறிப்பாக சிறுநீரக மாற்று சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை போன்றவர்களுக்கு முழு மருத்துவ உதவி செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளுக்குக் காரணம் அவர்களின் பொருளாதார தாழ்வுநிலையே என்பதை உணர்ந்து, அவர்களின் தொழில்துறையில் மேம்பட்டு அதன் மூலம் அவர்கள் தொழில்புரிவதை ஊக்குவிப்பதற்காக மட்டுமே IFCAI மூலம் 200 கோடி (Dalit Business Problem) ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம் பலர் தொழிலதிபர்களாக மிளிர ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘இந்துமால்’ என்று அம்பேத்கர் இறந்த இடத்தை நினைவிடமாக மாற்றியதுமட்டுல்ல மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த இடமான மத்திய பிரதேசத்தியில் உள்ள ‘மகூ’ என்ற இடம் நினைவிடமாக அறிவித்தது பாஜக அரசு.
அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்திருக்கும் இடம் நினைவிடமாக மட்டுமல்லாமல் நினைவில் நிலைத்திருக்கும் இடமாக மட்டுமல்லாமல் தலித் மாணவர்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தும் இடமாக மாற வேண்டும் என்ற நோக்கோடு லண்டனில் அம்பேத்கர் தங்கி இருந்த இடத்தை நினைவிடமாக மாற்றியமைத்தோடு இங்கிருந்து சென்று தங்கும் மாணவர்கள் தங்கி படிக்கும் இடமாகவும் மகாராஷ்டிரா பாஜக அரசு மாற்றி தலித் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த ஓர் இனம் ஏற்றமடைய வழி செய்திருப்பதை சொல்ல வேண்டிய அவசியத்தை எதிர்கட்சிகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
அதுமட்டுமல்ல இங்கே எல்லோரின் மனம் பதைக்கும் படி நடந்த தர்மபுரி கலவரமாகட்டும், சுவர் எழுப்பி அவர்கள் பாதிக்கப்பட்ட காலமாகட்டும், கோயில் நுழைவு அவர்களுக்கு மறுக்கப்பட்ட காலமாகட்டும், அவர்கள் தேர்கள் எரிக்கப்பட்ட காலமாகட்டும் அவர்களுக்கு ஆதரவாக இல்லாதது மட்டுமல்ல அதற்கு அன்றை மத்திய அரசை குறைசொல்லாத கட்சிகள் இன்று இத்தகைய கொடுமைகளுக்குக் காரணம் மத்திய அரசு காரணமில்லை என்று தெரிந்தும் வேண்டுமென்ற மோடி அரசை குறைகூறுகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சி வளர்ச்சி என்று இந்த நாட்டின் வளர்ச்சியை வைத்து அரசியில் செய்கிறது பாஜக ஆனால் மாட்டின் இறைச்சி என்று பேசி பேசி மாட்டின் இறைச்சியை வைத்து அரசியல் செய்கின்றனர் எதிர்கட்சிகள். எதற்கெடுத்தாலும் பிரதமரின் பெயரை இழுப்பது வாடிக்கையாகி விட்டது வேடிக்கையாக உள்ளது.
ஆகமத்திய அரசியல் எந்த அடிப்படை ஆதராமும் இல்லை, குறை கூறுவதையே வாடிக்கையாக சில கட்சிகள் கொண்டிருக்கின்றன என்பது பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு இவர்கள் பயப்படுகிறார்கள் என்றே காரணம்.
ஆம்பூரில் கலவரம் நடந்த போது பாதிக்கப்பட்ட தலித் சகோதரியைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. தர்மபுரி கலவரத்தில் பலர் வீடுகள் எரிக்கப்பட்ட தருமத்துடன் யாரும் நடந்து கொள்ளவில்லை, இளவரசுகளும், கோகுல்ராஜ்களும் உயிர் இழந்தது தடுக்கப்படவில்லை. விஷ்ணுப்பிரியாக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
ஆக நம் பிரதேசத்தில் நடந்து கொள்வதை புறக்கணித்துவிட்டு புறப்பட்டிருக்கிறார்கள் உத்திரபிரதேசத்தை கண்டித்து.
சரிசமமாக நடத்தப்பட வேண்டியவர்களை பிரித்துப்பார்த்து, ஒட்டி வாழாமல் ஒட்டுக்காக அவர்களின் -உணர்வுகளை உதாசீனப் படுத்தி இன்று அவர்கள் ஹரியானவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய போலி எதிர்ப்புகளையும், போலி அக்கறைகளையும் மக்கள் புரிந்து கொள்வார்கள். மோடியின் மத்திய அரசு எந்த அளவிற்கு இந்த மக்களு; உறுதுணையாக இருக்கிறது என்பது மக்கள் உணர்ந்தே இருப்பார்கள்.
இப்படிக்கு என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.