கரோனா தடுப்பூசி குறித்து கேலிபேசியதையும் தாண்டி, கடைசி மனிதனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தடுப்பூசிபோட்டது பாஜவின் சாதனை என்று ஈரோட்டில் அண்ணாமலை பேசினார்.
ஈரோடு வில்லரசம்பட்டியில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கரோனா பரவலின்போது நாட்டில் 30 கோடிபேர் இறப்பார்கள் என்று ராகுல் காந்தியும், உள்நாட்டில் தயாராகும் தடுப்பூசியில் தரம் இருக்குமா என ஸ்டாலினும், ஊசிபோட்டால் ஹார்ட் அட்டாக்வரும் என திருமாவளவனும் கேலி பேசினார்கள். ஆனால், நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 172 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தினை, கடைசி மனிதனுக்கும், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கொண்டுசேர்த்தது பாஜகவின் சாதனை. பிரதமர் மோடியின் சாதனை.
தரமற்ற பொருட்களை பொங்கல்தொகுப்பாக வழங்கி ஊழல் செய்துள்ளனர். எல்லாப் பொருட்களிலும் ஊழல் நடந்துள்ளது. இத்தனையும் செய்துவிட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதாக திமுகவினர் பொய்சொல்லி வருகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சாதாரணமானவர்கள். உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கும் அவர்களை ஆதரியுங்கள் என்றார்
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |