சுற்றுலாத்துறையின் அடையாளமாக 78 கலங்கரை விளக்கங்கள் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
உலகம் முழுவதும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகின்றன. இந்தியாவில் சுற்றுலாத்துறை மேலும்வளர அதிக வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் 189 கலங் கரை விளக்கங்கள் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. அதில் 78 கலங்கரை விளக்கங்கள் விரைவில் கட்டப்படும்.
குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா, தமிழ்நாடு, லச்சத்தீவு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம் மற்றும் அந்தமான் நிக்கோ பார் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் கலங்கரைவிளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதனால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், அருங் காட்சியங்கள் அமைக்கப்படும். தென்கொரியா, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்காவில் கலங்கரை விளக்க சுற்றுலா நன்றாக நடந்துவருகிறது. இந்தியாவிலும் அது விரைவில் சூடுபிடிக்கும் என்றார்.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.