சென்னையில், அமெரிக்க மற்றும் பின்லாந்து தொழில் நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டிய தயாரிக்கப் பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப் படுவதாக பிரதமர் மோடி கூறினார்.
உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பச் சவாலின்கீழ், ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் சிறிய நவீனவீடுகள் கட்டும் திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசியபிரதமர் கூறியதாவது:
புதிய தீர்வுகளை நிருபிக்க, புதிய சக்தியுடன் முன்னேறும் நாள் இது எனவும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வீடுகள்கட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பெறும். தொழில்நுட்ப மொழியில், இந்தவீடுகள், சிறிய நவீன வீடுகள் திட்டம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆறுதிட்டங்களும் உண்மையிலேயே கலங்கரை விளக்கம்போல், நாட்டில் வீட்டு வசதி துறைக்கு புதிய திசையைக்காட்டும்.
இந்த சிறியவீடுகள் திட்டம், தற்போதைய அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக உள்ளன. ஒருகாலத்தில் வீட்டுவசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை. தரத்திலும், நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்பட வில்லை. இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க, நாடு வேறு அணுகுமுறையைத் தேர்வுசெய்து, மாற்று வழியையும், சிறந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றுகிறது. அரசின் அமைச்சகங்கள் மந்தமான பெரியஅமைப்புகளாக இல்லாமல், புதியநிறுவனங்கள் போல் தகுதியுடன் இருக்க
இத்திட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட புதுமையான கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உலகளாவிய போட்டி, புதுமை மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் வளரும்வாய்ப்பை அளித்துள்ளது.
இன்றிலிருந்து ஆறுவெவ்வேறான இடங்களில் இருந்து ஆறு சிறியவீடுகள் கட்டும் திட்டம். இந்த சிறியவீடுகள் திட்டம், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை முறையால் உருவாக்கப்படும், இதுகட்டுமான காலத்தைக் குறைக்கும். ஏழைகளுக்கு ஏற்றவீடாகவும் இருக்கும். இந்த வீடுகளின் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புதுமை. உதாரணத்துக்கு, இந்தூரில் கட்டப்படும் வீடுகள் திட்டத்தில், செங்கல்மூலம் சுவர்கள் உருவாக்கப்படாது.
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவைஇருக்கும். ராஜ்கோட்டில் கட்டப்படும் சிறியவீடுகள், பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. அவை குகைத்தொழில்நுட்ப முறையில் கான்கிரீட் மூலம் உருவாக்கப்படும். இது பேரிடர்களைத் தாங்ககூடியதாக இருக்கும். சென்னையில், அமெரிக்க மற்றும் பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட்மூலம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும்முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன.
ராஞ்சியில் கட்டப்படும் வீடுகளில் ஜெர்மன்நாட்டின் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு அறையும், தனியாக உருவாக்கப்பட்டு, பொம்மை இணைப்பு வடிவங்களை சேர்ப்பதுபோல ஒன்றாகச் சேர்க்கப்படும். அகர்தலாவில் கட்டப்படும் வீடுகள், நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகு சட்டங்களைப் பயன் படுத்திக் கட்டப்படும். இது பெரியநிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது.
லக்னோவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிளாஸ்டர் மற்றும் பெயின்ட் தேவை இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுவர்கள்மூலம் இந்த வீடுகள் விரைவாகக் கட்டப்படும். ஒவ்வொரு இடத்திலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள்கட்டப்படும். ஒவ்வொரு இடமும் நமது திட்ட தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு புதிய தொழில் நுட்பத்தையும், அனுபவத்தையும் கற்கும் மையமாக இருக்கும்.
இத்துடன், கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான திறனை மேம்படுத்த சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும். அப்போதுதான், வீடு கட்டுமானத் துறையில், உலகின் சிறந்த தொழில்நுட்பம் மற்றம் பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கும்.
நம்நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா – இந்தியா திட்டம். இதன்மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டிடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும். இந்த பிரசாரத்தின் கீழ், ஐந்துசிறந்த தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான். ஆனால், பலஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவந்தனர். நம்பிக்கை ஏற்பட்டாலும், அதிக விலைகாரணமாக , வீடு வாங்குவது குறைந்தது. சட்டச் சிக்கல்களைச் சந்திக்கநேரிடும் என்பதாலும், மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
வங்கியின் அதிக வட்டி, வீட்டுக்கடன் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை வீடு வாங்கும் ஆர்வத்தை மேலும்குறைத்தன. சாதாரண மனிதரும் சொந்தவீடு பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் திருப்தி அளிக்கிறது.பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், நகரங்களில், லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
நடுத்தர மக்கள் வீட்டுக் கடன்களுக்கு அவர்கள் வட்டிமானியம் பெறுகிறது. கட்டி முடிக்கப்படாத வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டது. இது நடுத்தர மக்களுக்கு உதவும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்ற நடவடிக்கைகளும், வீட்டு உரிமையாரளர்கள் இடையே, தாங்கள் ஏமாற்றப்படமாட்டோம் என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 60 ஆயிரம் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
வீட்டுச் சாவியைப் பெறுவது, வீட்டைப்பெறுவது மட்டும் அல்ல, அது, கௌரவம், நம்பிக்கை, பாதுகாப்பான எதிர்காலம், புதிய அடையாளம் மற்றும் விரிவுபடுத்தும் சாத்தியங்களுக்கான கதவுகளையும் திறக்கும்.
மலிவான வீடுகளுக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்தது, ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாககுறைத்தது, எளிதான கடன்கள் பெற கட்டமைப்புத் துறையாக அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகள், கட்டுமானத்திற்கான அனுமதி தரப் பட்டியலில் 185 வது இடத்திலிருந்து 27வது இடத்துக்கு கொண்டுசென்றது. 2000க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டுமான அனுமதிக்கான நடைமுறைகள் இணையத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
ஊரகப் பகுதிகளில் 2 கோடிக்கும் மேற்பட்டவீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கிராம வீடுகளை விரைந்து முடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |