கோவனின் புத்தி கோணலாக இருந்தால்?

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியதாக கோவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நடு இரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஒரு பாடலுக்காக என்று என்னிடம் ஒரு பாடலைக் காண்பித்தார்கள்.  பாடலைப் பார்த்த பின்புதான் அதில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வதைத்தவிர வேறு ஆட்சேபகரமாக வேறேதும் இல்லை.

டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதற்காக ஏன் கைது செய்ய வேண்டும்?  டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வது, எல்லோருடைய கருத்தோடு ஒத்த கருத்துத்தானே!  அதனால் இதற்காக கைது அவசியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.  ஆனால் அதே கோவன் பாடிய மற்றொரு பாட்டை கேட்க நேர்ந்தது அதில் டாஸ்மாக்கை மூடு என்று கருத்து சொல்லாமல் முதலமைச்சரையும், பிரதமரையும் கொச்சைப்படுத்தி கேட்கத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி டாஸ்மாக்கை மூடுவதை நோக்கமாக கொள்ளாமல் தலைவர்களை கொச்சைப் படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.  

கருத்து சுதந்திரமாக இருந்திடினும் அது ஒருவரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதும், மாற்றுக் கருத்தை விமர்சனம் செய்தாலும் அந்த விமர்சனம் மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து.

அதனால் கோவன் அவர்கள் முதல்பாடல் கருத்து சுதந்திரமாகவும் மற்ற பாடல் களங்கம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.  அதனால் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கருத்து சுதந்திரம் என்பது களங்கமேற்படுத்தும் சுதந்திரமாக இருந்து விடக் கூடாது என்பதும், எல்லாவற்றிருக்கும் ஒரு வரைமுறை உள்ளது என்பதை கோவன் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் கைதிற்கு கண்டனம் சொன்ன தலைவர்கள் கூட அவரின் இந்த இரண்டாவது கொச்சைப்படுத்தும் பாடலைப் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றி கொள்வார்கள்.  கருத்து சொல்வதும் சட்டத்திற்குட்பட்டதாக இல்லையென்றால், சட்டம் தனது கடமையை செய்துதான் ஆகவேண்டும் என்பதை நான் இங்கே வலியுறுத்துகிறேன்.

                                 

     இப்படிக்கு
                                 என்றும் மக்கள் பணியில்
                                    
                             (டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...