பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும் என்றால் ஏன் பதறுகிறார்கள்

 பீகாரில் பா.ஜ.க. கூட்டணி தோற்க்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடிக்கும் என்கிற அமித்ஷவின் கூற்றில் என்ன தவறிருக்கிறது. ஆனால் இந்திய அரசியல் வானில் கொளுத்தமலே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியிருக்கிறதே.

 

“இது மதவாதத்தை பரப்பும் கருத்து.  பிகார் தேர்தல் ஒன்றும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அல்ல. இந்தியா தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாட, பாஜக ஒன்றும் இந்தியாவும் அல்ல , பிகார் ஒன்றும் பாகிஸ்தானும் அல்ல”. லல்லு பிரசாத் யாதவ்

 

“இது பிரிவினைவாத கருத்து. இதை  கேட்டு, மலைத்துப் போய் நிற்கிறேன். மோடி, பீஹாரை வெற்றி பெற எண்ணி, இந்தியாவை இழந்து விடுவார் போல தோன்றுகிறது" நிதிஸ் குமார்..

 

“பீகாரில் நீங்கள் தோற்றால் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கும். உங்கள் தோல்வியை மதவாதமாக மாற்றுவதை நிறுத்துங்கள்”. பிருந்தா காரத்

 

என அரசியல் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது. அமித்ஷவின் கருத்தில் அப்படி என்ன தவறிருக்கிறது 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் வெடிக்கலாம் என்ற அதீத நம்பிக்கையில் பாகிஸ்தான் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை இப்போது வெடிக்கலாம் அல்லவா?.

 

பாஜக.,வின் வெற்றியால் உருவான சோகத்தை, பதற்றத்தை பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்களிலேயே அப்பட்டமாக காண முடிந்ததே. நரேந்திர மோடி ஒன்றும் மன்மோகன் சிங் அல்ல . பாகிஸ்தான் தனது ஜிகாதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்று  டான் பத்திரிகை தனது தலையங்கத்தில் அலறியதே!.

 

லஷ்கர்-இ-தோய்பாவின் தலைவன் ஹபீஸ் சையது மற்றும் தாவுத் இப்ராகிம் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அவர்களது நடமாட்டம் கட்டுப்பட்த்தப் பட்டுள்ளது என்று பாகிஸ்தானின் உள்ளூர் பத்திரிக்கைகள் பலவும் பதரினவே!.

 

காங்கிரசின் படுதோல்வியை கண்டு அதற்க்கு ஆதரவான வார்த்தைகளை பல பத்திரிக்கைகள் தங்கள் கட்டுரைகளில் நுனிப்புல் போல மேய்ந்தனவே!.

 

ஏன் சமிபத்தில் அமெரிக்காவில் நடந்த ஐ.நா பொதுக்கூட்டத்துக்கு சென்ற  இந்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவில் சென்ற இடமெல்லாம் நட்சத்திர வரவேற்பு  அவரது நடை, அங்க அசைவுகள் ஆகியவற்றை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும்.மோடி, மிகச் சிறந்த மதிநுட்பமான அரசியல்வாதி. சமயோசிதமாக செயல்பட்டு, எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் அவருக்கு உண்டு என்று  பாக் பத்திரிக்கை ’தி நேசன்' சமிபத்தில் தலையங்கம் தீட்டி புலம்பியதே!.

 

இப்படி பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு  இந்தியாவை ஒரு புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதை கண்டு புலம்பும் அந்நாடும், அதன் பத்திரிக்கைகளும் ஏன் கொண்டாடாது?. பாஜக.,வுக்கு சிறு சறுக்கள் என்றாலும் ஏன் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தராது?.

 

இங்கே மத வாதம் என்பது எங்கிருந்து வருகிறது?. ஏற்க்கனவே பிரிந்துவிட்ட பாகிஸ்தானிடம் இருந்து மேலும் என்ன பிரிவினையை காண்கிறார் நிதிஸ்?.

 

 இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியல்ல என்கிறார் லல்லு. ஆனால் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றால், பாகிஸ்தானுக்கு நிகராக இந்தியாவிலும் ஒருசில இடங்களில் கொண்டாடப் படுகிறதே!  பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்காக இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் பாகிஸ்தானின் கொடி  ஏற்றப்படுகிறதே இது குறித்தெல்லாம் லல்லு வாய் திறப்பாரா?.  


ஆனால் ஒன்று இந்திய மதச் சார்பின்மை பல்கலைக் கழகத்தின் பாட திட்டத்தில்  பாகிஸ்தானுக்கு மதிப்பளிப்பதும், மரியாதை தருவதும் மதச் சார்பின்மையே என்ற புதிய சித்தாந்தத்தை புகுத்த முயற்சி செய்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

நன்றி; தமிழ்த்தாமரை VM வெங்கடேஷ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...