இந்தியாவில் 20 ஆயிரம் டன்னுக்கு மேல் தங்கம் பயன் படுத்தப்படாமல் உள்ளது. நாம் ஏழையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தியா ஏழ்மையாக இருக்கவேண்டும் என்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. சரியான திசையில் நாம் சில நடவடிக்கையை மேற்கொண்டால், இவற்றில் இருந்து நாம் விடுபடலாம். இவ்விவகாரத்தில் நாம் மிகப் பெரிய நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளோம். தங்கம் தொடர்பான திட்டங்கள் தொடங்கபட்டு விட்டது. நாங்கள் புதுமையான மற்றும் உருவாக்கும் திட்டங்களுடன் வந்துள்ளோம்.
இந்தியாவில் பெண்களது பெயரில் எதுவும் கிடையாது. ஆனால் தங்கம் உள்ளது. தங்கம் பெண்களை பலப் படுத்துகிறது, தங்கம் மீது உரிமை தொடர்பாகவும் குடும்பத்திற்கு எந்த ஒரு கேள்வியும் கிடையாது. பணத்தை பாதுகாக்கும் விதமாக, நாம் தங்கத்தை பாதுகாக்கிறோம் அவற்றை நமது தாய் மற்றும் சகோதரிகளுக்கு வழங்குகிறோம். தங்கத்தை பெண்களின் முன்னேற்ற த்திற்காக பயன்படுத்த வேண்டும். இந்ததிட்டம் மூலமாக நாம் இவற்றிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்திட்டமானது வெற்றிபெற்றால் பெண்களுக்கு தான் அதிகபங்கு இருக்கும்.
பல்வேறு தலைமுறைகளாக தங்கம் இந்திய குடும்பங்களில் இருந்துவருகிறது. மத்திய அரசின் எம்.எம்.டி.சி.யில் 5, 10 கிராம் நாணயம் 20 கிராம் கட்டி தங்கம் கிடைக்கும். போலியாக தயாரிக்க இயலாது எளிதில் மறு சுழற்சி செய்யக் கூடிய நாணயங்கள் இருக்கும். 2 புதிய முதலீட்டு திட்டங்களால் 20 ஆயிரம்டன் தங்கம் வெளிவரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. தங்க நகை தயாரிப்ப வர்களை இத்திட்டத்தில் முகர்வளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கத்தை பணமாக்கும் திட்டம் உட்பட 3 திட்டங்களை பிரதமர் இன்று துவக்கி வைத்து பேசியது.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.