‘‘பீகார் சட்ட சபை தேர்தலில் மோகன் பகவத்தின் இடஒதுக்கீடு மீதான கருத்து எந்தவொரு எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று தான் அவர் கூறினார். மெகாகூட்டணியின் சமத்துவ சமன்பாடுகள் எங்களுக்கு அரிய விலை கொடுத்து விட்டது’’ என்றார்.
பீகார் சட்ட சபை தேர்தலுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி, பதவியை ராஜினாமா செய்வாரா? என்று கேட்டதற்கு, ராஜ்நாத்சிங் பலமாக சிரித்தார். மேலும், ‘‘இது பா.ஜனதாவின் தோல்வி தானே தவிர, மோடியின் தோல்விஅல்ல. பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு மோடி பொறுப்பாகமாட்டார்’’ என்றார்.
தவிர, இந்த விவகாரத்தில் கட்சியின் தேசியதலைவர் அமித் ஷாவின் பதவிக்கும் குந்தகம் ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து தெரிவிக்கையில், ‘‘அமித் ஷா இன்னும் 6 ஆண்டு காலம் கட்சி தலைவராக நீடிப்பார். இதில் எந்தவொரு இடையூறும் இல்லை’’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் பா.ஜனதா அடைந்ததோல்வி குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்வோம் என்றும், இதன் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் .
மத்திய உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் தன்னுடைய வீட்டில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.