சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேற அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்வோம்

 சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறுவதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவை பெற அரசு அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நிதித் துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். துபாயில் ஐக்கிய அரபு எமிரேட்இந்திய பொருளாதார அமைப்பின் 2015ம் ஆண்டிற்கான மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்தமாநாட்டில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை நிறைவேற்ற எதிர் கட்சிகளின் ஆதரவைபெற முயற்சிப்போம்.பொருளாதார சீரமைப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிற நிகழ்வு ஆகும். கடந்த காலங்களில் எந்த சீரமைப்பு சட்டமும் நிறுத்தப் பட்டது இல்லை. ஆனால் தாமதம் ஆகி இருக்கிறது.சரக்கு மற்றும் சேவைவரி மசோதா பாராளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற வேண்டியிருக்கிறது. சரக்கு சேவைவரி பல மாநிலங்களின் வரிகளை ஒற்றை சந்தையில் உருவாக்கும்.

இந்த வரி மசோதா வருகிற 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  1ம் தேதிமுதல் அமல் படுத்த வேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தி ல சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறா விட்டால் அதற்கான காலக்கெடு தவறவிடப்படும். இந்த மாதம் 26ம் தேதியன்று பாராளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் துவங்குகிறது. இந்ததொடரின் போது சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறா விட்டால் அந்த சட்டத்தை உரிய கால கெடுவிற்குள் துவக்கமுடியாது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்டது. இந்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் நிறைவேற வேண்டி இருக்கிறது.

(மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவிற்கு போதிய பெரும் பான்மை இல்லை) சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறுவதற்கு முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மசோதாவில் சில திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று அந்த  கட்சி வலியுறுத்துகிறது. முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸ் சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம்.சீனாவில் பொருளாதார வளர்ச்சி மந்த மாகியுள்ளது. இதன் விளைவு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மூல வணிக பொருட்கள் விலை இந்தியாவிற்கு சாதகமாகவே இருக்கிறது.

உலகளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு இருந்தாலும் . கடந்த ஆண்டை க் காட்டிலும் இந்த ஆண்டு சிறந்தவளர்ச்சி பெற வேண்டி சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.(கடந்த 2014-15ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3சதவீதமாக இருந்தது.) இந்தியாவில் தொழில்கள் சுமூகமாக நடப்பதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.மானியவிஷயத்தில்  மாற்றம் செய்ய எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.சிலபகுதிகளில் இடையூறுகள் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...