மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மேயர்பங்களா பகுதியில், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் அமைக்கபடும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், பால் தாக்கரேயின் 3-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாநிலமுதல்வர் தேவேந்திர பட்னா விஸும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் நேற்று அஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் பட்னாவிஸ் கூறும் போது, “பாஜக, சிவசேனா கூட்டணிக்கு வித்திட்டவர் பால்தாக்கரே. அனைவரும் மதிக்கும் வகையில் மாநிலத்தை வளர்த்தெடுக்க எங்களுக்கெல்லாம் அவர் வழிகாட்டியாக விளங்கினார். அவரதுசேவையை அங்கீகரிக்கும் வகையில் மேயர்பங்களா பகுதியில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்படும்” என்றார்.
இதுதொடர்பாக ட்விட்டரில், “மக்களின் நலனுக்காக பால் தாக்கரே பாடுபட்டார். பெரும்பாலான மக்களால் மதிக்கப்படும் தலைவராக விளங்கினார். அவரது நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.