மத்திய அரசு, சரியானதிசையில் சென்று கொண்டிருக்கிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சரியானதிசையில் சென்று கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் கான்பூர்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அத்வானி நேற்று ஓட்டுபோட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பாராளுமன்ற தேர்தல், சட்ட சபை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். இந்த முறை இங்கு உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன’’ என்றார். பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்

கேள்வி:– நல்லகாலத்தை கொண்டு வருவோம்  என்று பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை, குறிப்பாக விலைவாசியை குறைப்போம் என்று கூறியதை, மோடி அரசு நிறைவேற்ற தவறிவிட்டதா? பருப்பு விலை கிலோ ரூ.200 அளவுக்கு உயர்ந்ததே?

பதில்:– எந்த ஒரு நிர்வாகத்துக்கும், எதையும் செய்து முடிப்பதற்கு ஒரு காலஅவகாசம் வேண்டும் என்று நான் நம்புகிறேன். அரசாங்கம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே நல்லசாதகமான முடிவுகள் வரும் என்று நம்புகிறேன்.

கேள்வி:– உள்ளாட்சி தேர்தல்களில் முடிவு எப்படிஅமையும்?

பதில்:– இதற்கு முன்னர் நரேந்திர மோடி தலைமையில் சட்ட சபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் கட்சி நல்லதொரு வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோன்ற முடிவுகள் உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்தால் நான் மகிழ்ச்சிஅடைவேன்.

கேள்வி:– பீகாரில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்ததேர்தல் (குஜராத் உள்ளாட்சி தேர்தல்) பாரதீய ஜனதாவுக்கு வெற்றிதேடித்தரும் என்று எப்படி கூறுகிறீர்கள்?

(பீகார் தேர்தலுக்கு பின்னர்) கட்சியில் விழிப்புநிலை அதிகரித்திருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமானதாக அமைவதற்கு ஏற்ற அனைத்து முயற்சிகளும் செய்யப் பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...