பிரதமர் மோடியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அரசியல்களத்தில் எதிரிகளாக மாறக்கூடாது.
தூய்மை தில்லி திட்டத்தை வெற்றி கரமாகச் செயல்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும். இத்திட்டத்தை மத்தியஅரசின் அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.
தூய்மைகுறித்த மக்களின் மனநிலையை மாற்றியாக வேண்டும். அதற்கு தூய்மை திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய தேவை எழுந்துள்ளது.
மக்களவைத்தேர்தல், தில்லி சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அரசியல்களத்தில் மோடியும், கேஜரிவாலும் எதிரிகளாக மாறக்கூடாது. வளர்ச்சி குறித்து இருவரும் கவனம் செலுத்தவேண்டும். தூய்மை தில்லி திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.96.70 கோடி அளிக்கப்படுகிறது. மேலும், தலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைப்பது போன்ற சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,500 கோடி வழங்கப்படும்.
கிடப்பில் உள்ள திட்டங்களை நிறை வேற்ற ரூ.1,665 கோடி வழங்கப்படும். வடக்குதில்லி மாநகராட்சிக்கு ரூ.85 கோடி வழங்கப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.