தமிழக மழைவெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய உள்துறை இணைச்செயலர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் 9 அதிகாரிகள் கொண்டகுழு வியாழக்கிழமை (நவம்பர் 26) தமிழகம் வருகிறது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது முதல், மழை-வெள்ள பாதிப்புகளில் சிக்கி 85 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மழைவெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச் சேரியிலும் ஆய்வு செய்வதற்காக, பல்வேறு துறைகளை சேர்ந்த 9 அதிகாரிகள் கொண்ட மத்தியக்குழு வியாழக் கிழமை தமிழகம் வருகிறது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மழைவெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வுசெய்வதற்காக, பல்வேறு துறைகளை சேர்ந்த 9 அதிகாரிகள் கொண்ட அமைச்சகங்களிடையிலான குழுவை, மத்திய அரசு வியாழக் கிழமை (நவம்பர் 26) தமிழகத்துக்கு அனுப்பிவைக்கிறது.
இதேபோல, ஆந்திரப் பிரதேச வெள்ளபாதிப்புகள் குறித்து அந்தமாநில அரசிடம் இருந்து கடிதம் கிடைத்தவுடன் அங்கும் ஆய்வுசெய்வதற்கு ஒரு மத்தியக்குழு அனுப்பி வைக்கப்படும்.
தமிழகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் மழைவெள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, அந்த இரு மாநிலங்களுக்கும் விரைவில் நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர, இந்த இரு மாநிலங்களுக்கும் மேலும் நிதி வழங்குவது குறித்து, மத்திய குழுவின் ஆய்வுக்குப்பிறகு முடிவு செய்யப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா, திங்கள் கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதில், உடனடி வெள்ள நிவாரண- மீட்பு நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும், உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும், ரூ.8,481 கோடி தேவை என முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழகத்துக்கு முதல் கட்டமாக, ரூ.939 கோடியையும், ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.700 கோடியையும் மத்திய அரசு திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்தது.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.