தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும்

 தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த 21–ந் தேதி மலேசியா சென்றிருந்தார். இந்த பயணத்தின் இறுதி நாளன்று அந்த நாட்டு பிரதமர் நஜிப்ரசாக்குடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்தினார்.

கோலாலம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் நிர்வாக தலை நகரும், தோட்ட நகருமான புத்ரஜயாவில் இந்த சந்திப்பு நடந்தது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

அப்போது தீவிரவாத சவால்கள் மட்டுமின்றி பாரம்பரியம் மற்றும் பாரம் பரியமற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இருநாடுகளும் பகிர்வது என ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஜனநாயகம், பன்மைத் தன்மை மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பும் உறுதி செய்யப் பட்டது.

பின்னர் இருநாடுகளுக்கு இடையே சைபர்பாதுகாப்பு, கலாசார பரிமாற்றம், திட்டம் மற்றும் செயலாக்கல் துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பின் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


தீவிரவாதம், உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. பல்வேறு நாடுகளில் சமீப காலமாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது நடந்துவரும் எல்லையற்ற தாக்குதல்களும், தீவிரவாதத்தின் உலகளாவிய இயற்கையை நினைவூட்டுகிறது.

மதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான எந்த பிணைபையும் நிராகரித்து இஸ்லாமின் உண்மையான மதிப்புகளை வெளிப்படுத்திவரும் பிரதமர் நஜிப் ரசாக்கை வாழ்த்துகிறேன். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அவரது தலைமைத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.

நமது பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் இரு நாட்டு பகிர்வு அர்ப்பணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தபாதுகாப்பு ஒத்துழைப்புக்காக உங்களுக்கு தனிப் பட்ட முறையில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த துறையில் நமது ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தை பொறுத்த வரை, கடலோர பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.


சைபர்பாதுகாப்பு துறையில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நமதுவாழ்வு பல்வேறு வலைப்பின்னல்களை கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு உறவுகளை மேம்படுத்த முடியும் என்ற பிரதமர் நஜிப்பின் நம்பிக்கையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். அதுமட்டுமின்றி இருதரப்பு ஒத்துழைப்பையும் புதிய மட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என நம்புகிறேன்.


இந்தியாவின் சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பங்களிப்பை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.

இதைப் போல மலேசியாவின் ரெயில்வே கட்டுமானத்துறையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை ஆற்றுகின்றன. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

பொது நிர்வாகம் மற்றும் ஆளுமையில் சிறந்த ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம். இதற்காக நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவின் பொருளாதார திட்ட அமைப்பான ‘பிமாண்டு’வுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அதனுடன் எங்கள் நிதிஆயோக் அமைப்பும் இணைந்து செயல்பட கேட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மலேசிய பிரதமர் நஜிப்ரசாக், பாதுகாப்பு துறையில் இருதரப்பும் இணைந்து தயாரிப்பது குறித்து கவனத்தில் கொள்ள இருநாடுகளும் விரும்புவதாக கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் ஒரு பொதுவான நிலையை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அதில், ‘அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்தை நிராகரித்து தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்கிறோம். இந்தவிவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...