பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி

‘பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக, ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 17) டில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகிய இருவரும் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பிரதமர் மோடி, நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை வரவேற்கிறேன். பிரதமர் லக்சன் நீண்ட காலமாக இந்தியாவுடன் தொடர்புடையவர். எங்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்.

வளர்ச்சியின் கொள்கையை நாங்கள் நம்புகிறோம். 2026ம் ஆண்டில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு உறவின் 100 ஆண்டுகளைக் கொண்டாடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். சட்டவிரோத இடம்பெயர்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது: இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவோம். பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், நானும் விவாதம் நடத்தினோம், என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்� ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ� ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட� ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச� ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

விமர்சனங்களே ஜனநாயகத்தின் ஆன்� ...

விமர்சனங்களே ஜனநாயகத்தின் ஆன்மா – பிரதமர் மோடி 'பாட்காஸ்ட்' எனப்படும் இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ...

ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராக � ...

ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராக வேண்டும் – போடோ இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு வரும் 2036ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...