நமது நாட்டில் இது வரை ஒன்றுக்கும் உதவாத அமெரிக்கா -ரஷ்யா கைக்கூலி களே நாட்டை ஆண்டு வந்துள்ளனர் .முதன் முதலில் ஒரு இந்தியன்ஆழ்வது தற்போது மட்டுமே .அதை பொறுக்க மாட்டாமல் தான் மோடி பற்றி வீணர்கள் பொய் புரளி கிளப்பி சந்தோசம் அடைகிறார்கள்
டாலர், பவுண்ட் வரிசையில் இந்திய ரூபாய் பத்திரங்கள்-மோடி
எவ்வளவு துணிச்சலான இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக் கும் வார்த்தைகள்.உலக பொருளாதாரமே அமெரிக்காவின் டாலரை சுற்றி வரும் பொழுது அதை இந்தியாவின் ரூபாயை சுற்ற வைக்க நினைக்கிற மோடியின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்..
ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது அந்த நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பொருத்து கையில் இருக்கும் அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் பெட்ரோலிய பொருளில் ஆரம் பித்து அனைத்து பொருள்களும் அமெரிக்க டாலரை வைத்தே விற்பனை செய்யபடுவதால் டாலரை சுற்றியே அனைத்து நாட்டி ன் நாணயங்களும் சுற்ற ஆரம்பித்தன
இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது இந்தியாவின் ஒரு ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலராகும்.
ஆனால் இப்பொழுது ஒரு அமெரிக்க டாலருக்கு இந்தியாவின் ரூபாய் 66ரூபாய் 31 பைசாவாகும்.எதனால் நம்முடைய ரூபாயின் மதிப்பு குறைந்தது என்றால் தங்கம் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் இறக்கு மதியே இதற்கு காரணமாகும். இந்தியாவின் ரூபாயின் மதிப்பு தங்கத்தை வைத்தே கணக்கிடப் படுவதால் நம் நாட்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கும்போது ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது..ஏனெனில் இறக்குமதி செய்யும்பொழுது அதற்கு உண்டான டாலரை இந்தியா 66 ரூபாய் கொடுத்து வாங்கி தான் தங்கத்திற்கு கணக்கை செட்டில் செய்கிறது.
ஆனால் நாம் ஏற்றுமதி செய்யும்போது நமக்கு மற்ற நாடுகள் ஒரு டாலர் தந்தால் நமக்கு 66 ரூபாய்கிடைக்கிறது.. இதனால் தான் ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க உள்நாட்டில் உற்பத்தி பெருக அந்நிய முதலீடு அவசியமாகிறது.
நாம் கடைத்தெருவில் போய்பொருள்களைவாங்கி கொண்டு
வந்தால் வீட்டில் இருக்கும் பணம் காலியாகிவிடும் அதேமாதிரி
நம்மிடம் உள்ள பொருள்களை விற்றுவிட்டு வந்தால் நம்முடைய பாக்கெட் நிரம்பிவிடும். ஆகவே நம் நாட்டு ஏற்றுமதிமதி பெருக்கஉள்நாட்டின் உற்பத்தி பெருக்க தொழிற்சாலைகள் பெருக அந் நிய முதலீடை கொண்டுவர மோடி நாடு நாடாக சுற்றுகிறார்..இது புரியாமல் ராகுல் மாதிரி அரைவேக்காடுகள் உளறிகொண்டி ருக்கிறார்கள்.இந்தியாவின் நாணயமான ரூபாய்க்கான பத்திரங்கள் வெளிவரும்
பொழுது இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து இருக்கும். அப்பொழு து அதில் முதலீடுகள் செய்யும் பொழுது இந்தியாவின் ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும் இந்தியாவின் மதிப்பும் உயரும். இதற்கு முன்னோட்டமாகத்தான் நம் நாட்டின் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க கொஞ்ச நாளைக்கு முன்னாள் மோடி ஒரு அற்புதமான திட்டத்தை அறிவித்தார். அதாவது மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தினை வங்கிகளில் கொடுத்து அதற்கு ஈடாக தங்கபத்திரங்களையும் வட்டியையும் பெற்று கொள்ளும் திட்டம்.இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே..
நம்ம மக்கள் நகையை எடுத்துக்கொண்டு அடகுகடைக்கு செல்வார்களே ஒழிய அரசாங்கத்திடம் செல்ல மாட்டார்கள்
ஏனெனில் நம்ம மக்கள் என்றும் கறுப்பாகவே இருக்க விரும்புகிறார்கள்..
மோடியிடம் கறுப்பு பணம் என்னாச்சு என்று கேட்கிற மக்கள் தாங்கள் மட்டும் வெள்ளையாக வெளிப்படையாக எதையும் செய்ய மாட்டார்கள்.ஏனெனில் நம் மக்கள் நாடு வேறு வீடு வேறு என்று வாழ்கிற டைப்..அதனால் இவர்கள் நேர்மையாக தங்களிடம் இருக்கும் தங்கத்தை வெளியில் கொண்டுவர மாட் டார்கள்.கறுப்பாகவே தங்கத்தை வாங்குவார்கள்.கறுப்பாகவே
இடத்தை முடிப்பார்கள்..
ஆனால் இவர்கள் அரசை கேள்வி கேட்பார்கள்..கறுப்பு பணம்
என்னாச்சு .என்று..
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.