முறைகேடுகளை தவிர்க்கும்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரண நிதியைச் செலுத்தவேண்டும் என்றார் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவர் அளித்த பேட்டி:
வீரமிக்க காளையுடன் வீரமிக்க இளைஞர்கள் மோதும் விளை யாட்டு ஜல்லிக்கட்டு. இதை மிருகவதை என மத்திய அமைச்சர் மேனகாகாந்தி கூறுவது ஏற்கத் தக்கதல்ல.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி வரும் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் அமைப்புப்பணிகள் அனைத்தும் முடிக்கப் பட்டுவிடும்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன், ஜாமீனில் வந்தபிறகு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்திப்பது முரண்பாடாக உள்ளது. மது விலக்கு கோரி போராட்டத்தை கோவன் தொடர்ந்து முன்னின்று நடத்தினால் அவருக்கு 75 சதவிகித மக்களின் ஆதரவு நிச்சயம்கிடைக்கும்.
பருவ மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிய ஒருமணி நேரத்துக்குள் ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை முழுமையாக சென்றடையவேண்டும்.
தேர்தல் ஆதாயமாக கருதி நேரடியாக பணத்தைவாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக்கணக்கில் அத்தொகையை செலுத்த வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.