நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகைக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம்கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சி நிதியை பயன் படுத்தி விலைகொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்குதொடுத்துள்ளார்.
இந்தவழக்கில் அவர்கள் வரும் 19-ந் தேதி நிதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தவிவகாரம் பாராளுமன்றத்தில் புயலைகிளப்பி வருகிறது. இது மத்திய பாஜ.,கூட்டணி அரசின் பழிவாங்கும் செயல் என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிரதமர் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப் பட்ட 100 சதவீத அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. என்று மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இதை மத்திய அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது பற்றி அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-
நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் பாராளு மன்றத்தில் பேசுவதற்கு ராகுல்காந்திக்கு துணிச்சல் இல்லை. பாராளுமன்றம் செயல்பட விடாமல் இடையூறு ஏற்படுத்துவதற்கு அவர் தான் முக்கிய காரணம். அவருக்கு எதிராகவும், சோனியா காந்திக்கு எதிராகவும் நீதி மன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஹீரோ ஆக முயற்சிக்கிறார்கள். அவர்கள் தைரியம் இருந்தால், பாராளுமன்றத்துக்கு வெளியேசொல்வதை, உள்ளே வந்து சொல்லட்டும்.
நாங்கள் ராகுல் காந்திக்கு கூறுகிறோம். அவருக்கு துணிச்சல்இருந்தால், அவரிடம் நேர்மை இருந்தால், அவர் அவரதுகட்சியின் தலைவராக இருந்தால், அவர் பாராளு மன்றத்துக்கு வரவேண்டும். நீதித் துறைக்கு எதிராக அவர் கூறிய கருத்துகளுக்கு உரிய ஆதாரத்தை காட்டவேண்டும். அரசுக்கு எதிராகவும், பிரதமர் அலுவலகத்துக்கு எதிராகவும் கூறியுள்ள கருத்துக்கு உரிய ஆதாரத்தை காட்டவேண்டும். அவர் சபைக்குவந்து, ஆதாரத்துடன் பேசவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.