மேக் இன் இந்தியா ஜப்பானிலும் ஒரு இயக்கமாக செயல்படுகிறது

 இந்தியாவின் முதல் புல்லட்ரயில் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் நேற்று  கையெழுத் தானது. மேலும், சிவில் அணு சக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு துறை தளவாடங்களை பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களும்  கையெழுத்தாகின.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.  இரு தலைவர்களும் இந்தியா-ஜப்பான் வர்த்த தலைவர்கள் மாநாட்டில்  பங்கேற்றனர். இந்தமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேக் இன் இந்தியா’ திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, ஜப்பானிலும் ஒருஇயக்கமாக  செயல்படுத்தப்படுகிறது. ஜப்பான் நிறுவனமான சுசுகி இந்தியாவில் கார்களை தயாரித்து அந்நாட்டுக்கு ஏற்றுமதிசெய்ய இருக்கிறது.
இதற்காக ஜப்பான் அரசு 11-12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது, இரு நாடுகளும் இணைந்து  முன்னோக்கி செல்வதை காட்டுகிறது.

உலகளவில் மந்தமான பொருளாதார நிலை நிலவும் நிலையில் இந்தியா, ஜப்பான் பொருளாதார நிலை ஊக்குவிப்பதாக இருக்கிறது. கடந்தமுறை ஜப்பான் பயணம் சென்றபோது, அந்நாட்டு அரசு 45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவில்  மேற்கொள்வதற்கு ஒப்புக்கொண்டது.

இவ்வளவு அதிகமானதொகை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது குறுகிய  காலகட்டத்தில், அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவது கண் கூடாக தெரிகிறது. அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவதில் மட்டும்  இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல் பட்டால் போதாது வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்வதிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து  செயல்படவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...