விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை ஏற்று கொள்ளுங்கள் என்று விவசாயிகளுக்கு முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.
நாக்பூரில் நடைபெற்று வரும் விவசாய திருவிழாவை முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய ரசாயன மற்றும் உர மந்திரி ஹன்சுராஜ் அகிர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது:–
பருவநிலை விவசாயிகளிடம் கண்ணா மூச்சி ஆடுவதால் நாம் இயற்கையை சார்ந்திருக்க முடியாது. இது போன்ற சூழ்நிலையில், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய பயிர்களுடன் சோதனை நடத்தவேண்டும். இது விவசாயிகளின் நிதி நிலைமையை அதிகரிக்கும். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் உதவியை விவசாயிகள் கண்டிப்பாக பெற்று, தங்களுடைய மன நிலையை மாற்றவேண்டும்.
விவசாய உள்கட்டமைப்பில் முதலீடுசெய்யும் பொருட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரூ.2500 கோடி முதல் ரூ.3500 கோடிவரை நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் பரிந்துரைக்குமாறு மத்தியமந்திரி நிதின் கட்காரியிடம், தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தினார்.
பின்னர், நிதின்கட்காரி பேசும்போது, ‘‘விவசாயிகளுக்கு தடை இல்லாமல் மின்விநியோகம் அளித்தால், விவசாய உற்பத்தி பன் மடங்கு அதிகரிக்கும்’’ என்றார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.