தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் சூழல் உருவாக்கபடும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் உறுதியளித்திருப்பதாக மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஒன்றரை ஆண்டுகளாக பிஜேபி எடுத்துவரும் முயற்சிகளுக்கு பலன்கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை ராஜா அண்ணா மலைபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டை நடத்த அவசரசட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே போல் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அவர்களுக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜல்லிக் கட்டை நடத்த வேண்டும் என்ற கருத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது நடை பெற்று வரும் குளிர்கால கூட் டத் தொடரின் போதும் இது குறித்து அந்த துறையினுடைய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரிடம் வலியுறுத்திவந்தேன்.
நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் கடிதம்குறித்து விவாதிப்பதற்காக அந்த துறையினுடைய அதிகாரிகளை அமைச்சர் ஜவ்டேகர் அழைத்திருந்தார். அந்த கூட்டத்திற்கு என்னையும் வருமாறு அழைத்தார். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டன. விரைவில் நல்லமுடிவு எட்டப்படும் என்றும் வரும்பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் சூழல் உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த, ஒன்றரை ஆண்டுகளாக பிஜேபி எடுத்துவரும் முயற்சிகளுக்கு பலன்கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழக வெள்ளநிவாரண பணிகளில் பிஜேபி முன்னிலை பெற்றுள்ளது. நிவாரண பணிகளுக்கு தேவையான மேலும் நிதியுதவி வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.