ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் நரேந்திரமோடி மீது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குறைகூறுவது நகைப்புக்குரியது' என்று பிரதமர் அலுலவக இணையமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.
துணைநிலை ஆளுநரை பயன்படுத்தி ஆத் ஆத்மி அரசுக்கு பிரதமர் நெருக்கடி கொடுக்கிறார்'', ""தில்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பாஜக.,வின் 2-வது அணி போல செயல் படுகின்றனர்'' என்று கேஜரிவால் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்புதெரிவித்து, தில்லியில் அமைச்சர் ஜிதேந்தர் சிங், மேலும் கூறியதாவது: ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் மீது கேஜரிவால் குற்றம் சாட்டி வருகிறார். பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி மலிவானவிளம்பரம் தேடுவதற்கு அவர் முயல்கிறார். இது மிகவும் நகைப்புக் குரிய விஷயமாகும்.
எவ்வித ஆதாரமும், இலலாமல் ஒருவர்மீது குறைகூறுவதில் அர்த்தமில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள், பாஜக.,வினரை போல செயல் படுகின்றனர் என்று கூறியதை நிரூபிக்க கேஜரிவாலிடம் எந்த ஆதாரமும் இல்லை . அரசு அதிகாரிகளுக்கு நல்லசூழலை உருவாக்கி கொடுக்கா விட்டால், உங்களால் (ஆம் ஆத்மி) எப்படி நல்லாட்சியைக் கொடுக்கமுடியும்? நல்ல நிர்வாகத்தையும், பணிபுரிவதற்கு உகந்த சூழலையும் உருவாக்கி கொடுப்பதில் மத்தியஅரசு உறுதியுடன் உள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.