பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்ததில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு உள்ளதை மறுக்கமுடியாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-
பஞ்சாபில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததால் விமானப் படை தளத்திற்கு நிகழவிருந்த மாபெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியிருக் கின்றனரா? என்பதை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் விமானப்படை தீவிரமான தேடுதல்வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ்-இமுகம்மது தீவிரவாத அமைப்பு உள்ளதை மறுக்க முடியாது. இந்திய மண்ணில் தீவிரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இடம்கொடுக்க முடியாது. தீவிரவாதிகளுக்கு இந்திய பாதுகாப்புபடை தக்கபதிலடியை கொடுத்தே தீரும். இந்த தாக்குதலுக்கு தகுந்தபதிலடியை வழங்கிய பாதுகாப்பு படை வீரர்கள், துணை ராணுவப் படை வீரர்கள், பஞ்சாப் போலீஸ் ஆகியோரால் இந்தியா மிகுந்த பெருமை கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.