அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஜைன மதத்தினரின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அனைத்துகால கட்டங்களிலும் கெட்ட எண்ணங்களை கொண்ட நபர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் நீடித்ததில்லை.
அதேபோல், அனைத்து காலகட்டத்திலும் நல்ல நபர்களும் இருப்பார்கள். நல்லகாரியங்களை செய்வதற்காக யாரையும் அச்சப்பட வைக்கக் கூடாது. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அச்சப்படக்கூடாது.
அச்சமில்லாதவர்களாக திகழ்வதற்கு, உடல்வலிமை மட்டுமே அவசியம் இல்லை. மனவலிமை இருந்தாலே போதும்.
இந்தியாவின் உண்மையான வலிமையே, நமது கலாசாரம் தான். நமது நாட்டில் இருக்கும் அனைத்து மதங்களும், உண்மை வழியையும், அஹிம்சையையுமே போதிக்கின்றன.
உலகத்துக்கு முன்னேற்றத்துக்கான பாதையை இந்தியா காட்டவேண்டும். இந்தியாவை சிறந்த நாடாக்கும் வகையில், நம்நாட்டு இளைஞர்களை நாம் மேம்படுத்தவேண்டும். இதற்கு நன்னெறிகளில் இருந்து நமது இளைஞர்கள் பாடம் கற்கவேண்டும். நமது நாட்டைச் சேர்ந்த புனிதர்களின் போதனைகளை நாம் நமது சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும். பிறகு, அதை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் மோகன் பாகவத்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.