அரியலூர் மாவட்டம் திருமானூர், பாளைய பாடியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார். அப்போது திருமானூர் அருகே கிராம மக்கள் 10 ஜல்லிக்கட்டு காளைகளுடன் அவரதுகாரை வழிமறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மனுகொடுத்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும் என்று அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அவர்கள் கொண்டுவந்த ஒரு ஜல்லிக்கட்டு காளையை அவர் தடவிக் கொடுத்தபடியே மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
கூட்டத்தை கண்டதும் மிரண்டு போன அந்தகாளை திடீரென தலையை சிலுப்பியது. இதில் அந்தமாட்டின் கொம்பு பொன்.ராதாகிருஷ்ணனின் வலது உள்ளங்கையில் குத்திகிழித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கையை உதறியபோது, ரத்தம்வழிந்தது.
உடனே பொதுமக்கள் அந்தகாளையை பிடித்துக்கொண்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் காரில் ஏறி திருமழப் பாடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருடைய காயத்திற்கு முதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். காயம் ஏற்பட்ட கையில் ஒருதுண்டை சுற்றியிருந்தார்.
பின்னர் அரியலூர் வந்த அவரிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இது ஒருவிஷயமே கிடையாது. தடுக்கி விழும்போது கை, காலில் அடிபடுவதுபோல சாதாரணமாக காளையை பிடித்த போது நடந்த சம்பவம் இது. நான் மாட்டை பிடித்தேன், மாடு என்னை பிடித்துக்கொண்டது” என்றார்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.