அம்பேத்காரிடம் மதம் மாற்றும் பாட்சா பலிக்கவில்லை
யவள என்ற ஊரில் 1935ம் ஆண்டு மே மாதம் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை விவாரித்துப் பேசினார். மேலும் தனக்கு மதம் மாறும் எண்ணம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உடனேயே கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தவர்கள் அவரைத் தங்கள் மதத்தில் சேருமாறு வேண்டினர்.
ஹைதராபாத் நிஜாம் அவரை முஸ்லிமாக மதம் மாறும்படி கோரினார். அதற்கு சன்மானமாக ரூபாய் ஏழு கோடி தருவதாகக் கூறினார்.
பாரதத்தில் அப்போது நடைபெற்று வந்ததோ கிறிஸ்தவ ஆட்சி, கிறிஸ்தவராக மதம் மாறினால் அரசாங்கத்தில் பல உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும் என்று கிறிஸ்தவ மதகுருமார்கள் அவருக்கு ஆசை காட்டினார்கள்.
இந்த மாநாட்டிற்குப் பின்னர் ஒருமுறை அவர் காந்தியடிகளைச் சந்தித்தார். அப்போது காந்தியடிகள் அவா¢டம் இது குறித்துப் பேசினார். காந்திஜியிடம் அம்பேத்கர் தான் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறப் போவதிரல்லையென்று வாக்கு கொடுத்தார். மேலும், "நம்நாட்டின் தேசியத்தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத விதத்தில் தான் நான் இணைவேன்" என்றும் உறுதி கூறினார். இது காந்திஜிக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் புத்தமதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு தடவை மலேசியாவில் நடைபெற்ற பெளத்தமத மாநாட்டில் அவர் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பும் போது ஆழகிய புத்தர் சிலை ஒன்றும் வாங்கிக் கொண்டு வந்தார்.
நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார். அவருடைய ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்
தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன் என்றறெல்லாம் சொல்லி அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் அதைத் தெளிவாக்குகின்றன.
"புத்த மதம் பாரதீய ஹிந்து கலாச்சாரத்தின் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ, எவ்வித பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்."
You must be logged in to post a comment.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
2unification