காஷ்மீர் முதல்வர் முப்திமுகம்மது சயீத் (79) உடல் நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் இன்று காலை உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சயீத் முன்னரே அறிவித்திருந்தது போல் காஷ்மீரின் அடுத்தமுதல்வராக அவரது மகள் மெகபூபா பதவியேற்க உள்ளார்.காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத், நிமோனியா காய்ச்சல் மற்றும் ரத்தஅணுக்கள் குறைவு காரணமாக டிசம்பர் 24ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
முதலில் உடல் நிலை தேறி வந்த அவருக்கு கடந்த சிலநாட்களாக உடல் நிலை மோசமடைந்தது. சுவாச கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 7.15 மணிக்கு அவரது உயிர்பிரிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.