மேற்குவங்க மாநிலம் மால்டாவில் மதக் கலவரமும் அதை தொடர்ந்து பெரும்பதற்றமும் நிலவி வருவதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய 3 பேர்குழுவை பாஜக தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் அசம் கான் தெரிவித்த சர்ச்சைகருத்துக்கு இந்து தலைவர் சர்ச்சை பதில் அளித்தார். இதை கண்டித்து . கடந்த 3ம் தேதி ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் திரண்டு ஊர்வலமாக சென்றனர். திடீரென அங்கு வன்முறை வெடித்தது. ஊர்வ லத்தை தாண்டிசெல்ல எல்லை பாதுகாப்ப படைவாகனம் ஒன்று முயன்றபோதும், வீரர்களுக்கும், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கலவரம் மூண்டதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து கலியாசக் காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. பல வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உயிரிழப்பு ஏதும் இல்லை. மேற்கு வங்கத்துக்கு வரும் மே மாதத்துக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நெருங்குவதால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கலவரக்காரர்கள் தொடர்ந்து அங்கு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மால்டாவில் நடப்பது குறித்து அறிக்கை கொடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18ம் தேதி மால்டாவுக்கு செல்ல உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் கடும் நடவடிக்கை வேண்டாம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போலீசாருக்கு ரகசிய உத்தரவிட்டிருப்பதாக பாஜ குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் மால்டாவில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய பாஜ பொது செயலாளர் புபேந்தர் யாதவ் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை கட்சி தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார். இந்த குழுவில் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் பி.டி.ராம் ஓய்வு பெற்ற டிஜிபி ஆவார். இந்தக்குழு இன்று அல்லது நாளை மால்டா சென்று விசாரணை நடத்தி தனது அறிக்கையை அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் என தெரிகிறது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.