தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய பாஜக. தலைவர் அமித்ஷா வேண்டுகோளுக் கிணங்க, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பயன் தரும் அளவுக்கு பயிர்காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் அளித்து, விவசாயபுரட்சியை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
விவசாய மக்களுக்கு பயன்தரும் இந்த காப்பீட்டுதிட்டம் மூலம் கடன்பெறலாம், விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன் படுத்தலாம். மேலும், குறைந்தவட்டி காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை தமிழக பாஜக. தலைவராகிய நான் சோகமுடன் சொல்கிறேன். ஏனென்றால், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து தமிழகமக்கள் மட்டுமல்லாது, தமிழக தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இடைக்காலதடை விதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசால் அவசரசட்டம் இயற்ற முடியாது. ஆனால் அதேசமயத்தில், தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியும்.
மத்திய அரசு இதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு நல்கமுடியும் என்ற செய்தியை மின்னஞ்சல் மூலம் மத்திய தலைமை எங்களுக்கு அனுப்பிஇருக்கிறது. எனவே, அவசரசட்டம் இயற்றி தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
கேள்வி:- ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒருநாள் இருக்கும் போது எப்படி அவசரசட்டம் கொண்டு வர முடியும்? அதற்கு வழி முறைகள் இருக்கிறதா?
பதில்:- மத்திய அரசு எந்த ஒருமுடிவு எடுத்தாலும், அதை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் தெரிவிக்கும். எனவே அதற்கான வழிமுறைகள் கண்டிப்பாக இருக்கிறது. மத்திய அரசு அனைத்து முயற்சி களையும் செய்துவிட்டது.
கேள்வி:- அவசரசட்டம் இயற்ற மாநில அரசை கூறும் நீங்கள், ஏன் மத்திய அரசு அவசரசட்டம் இயற்றக்கூடாது?
பதில்:- சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கும்போது, மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வந்தால், ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்துவதற்கு சிக்கல் வந்து விடும். மத்திய அரசு ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த அனுமதி வாங்கிதர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறது. அனைத்து கதவுகளும் தற்போது மூடப்பட்டுவிட்டன. தற்போது இருக்கும் ஒரேவழி மாநில அரசின் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.