யானை கட்டி போரடித்தது போல விமானம் வைத்து ரோடு போடுகிறார்கள்-

மாடுகட்டி போா் அடித்தால் மாளாது என்று நினைத்து யானை கட்டி போா் அடித்தார்கள் என்று தமிழனின் பெருமையையும் அப்பொ ழுது சிறந்து விளங்கிய உழவு தொழிலையும் பெருமை யாக சொல்வார்கள்..

.இப்ப நம்ம மோடி ஆட்சியில் நடக்கிற நெடுஞ்சாலை வேலை களை எல்லாம் அதிகாரிகள் கார்களில்போய் கண்காணிப்பதால் கால விரயம் உருவாகிறது . அதனால் விமானங்களின் மூலம் நெடுஞ் சாலை துறையின் வேலைகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரோடுகளின் வழி போக்குவரத்து என்பது ஹரப்பா நாகரக காலமான கி.மு4000-த்தில் இருந்தே தொடங்கியிருக்கிற து. அசோகர், ஹர்சர், முகாலயர்கள் ஆகியோர் காலத்தில் சாலை கள் மேலும் வளர்ச்சி பெற தொடங்கியுள்ளன.

தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு முன்னோடி ஷேர்ஷா என்பவர் தான். இவர் 1540ம் ஆண்டிலேயே அப்போதை ய இந்தியாவில் மிகப் பெரிய சாலையான க்ராண்ட் ட்ரங்க் என்ற ழைக்கப்படும் சாலையை உருவாக்கியுள்ளார்.பெஷாவர் முதல் டெல்லி வரை அமைத்த இந்த க்ராண்ட் ட்ரங்க் ரோடு இன்று 2500கி.மீ தொலைவுள்ள ஒரே நீளமான சாலையாக உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே இரண்டாவதாக அதிக தொலைவிற்கு ரோடுகள் அமைக்கபட்டுள்ள நாடு இந்தியா தான். நம்ம நாட்டில் உள்ள ஒரு கிலோ மீட்டர் நிலப்பகுதியில் 0.66 கிலோமீட்டர் அளவிற்கு ரோடுகள் போடபட்டுள்ளது.அதுவும் மத்தியில் வாஜ்பாய் அரசு வந்தவுடன் தான் நாட்டில் ரோடுகள் போடுவது வேகமெடுத்தது.

நம் நாட்டில்4,865,000 கிலோமீட்டர் தொலைவிற்கு ரோடுகள் உருவாக்கபட்டுள்ளது.இதில் மாநில நெடுஞ்சாலைகள் 1,63,898 கிலோமீட்டர் தொலைவிற்கும் மாவட்டங்களை இணைப்பதற்கு 17,05,706 கிலோமீட்டர் தொலைவிற்கும் கிராமங்களை இணைப் பதற்கு 27,49,805 கிலோமீட்டர் தொலைவிற்கும் ரோடுகள் உள்ள து.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் எக்ஸ்பிரஸ் சாலைகள் நான்கு வழி சாலைகள் ஆறு வழி சாலைகள் போடபட்டுள்ளது. நம் நாட்டில் 230 தேசிய நெடுஞ்சாலைகள் எனப்படும் NATIONAL HIGH WAYS ROADS உள்ளது. இவற்றின் மொத்த நீளம் 92,851 கிலோ மீட்டராகும்

பொருளாதார வளர்ச்சி வேகம் பெற, சாலைகள் முக்கியம் என்பதால், மத்திய அரசும் இதற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாளைக்கு 10 கி.மி தூரத்துக்கு தான் இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கபட்டு வந்தது. ஆனால் தற்பொழுது ஓவ்வொரு நாளும் 30 கிலோமீட்டர்
தூரம் ரோடுகள் போடப்பட்டு வருகின்றது.2013-2014 ல் 3621 கிலோமீட்டர் தூரத்திற்கு போடபட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மோடி ஆட்சி வந்த பிறகு 2014-2015 ம் ஆண்டில் 7960 கிலோமீட்டர் ரோடுகள் போடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச்சுக்குள், சாலை பணிகளுக்காக, 1.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும்,100 கிலோமீட்டர். துாரத்திற்கு சாலைகள் அமைக்கும் வண்ணம், பணிகளை வேகப்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, அவற்றை துரிதப்படுத்த விமானத்தை பயன்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர்
.
இதற்காக, எட்டு முதல், 10 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான விமானத்தை பயன்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...